வைணவ சபை மாநாடு


வைணவ சபை மாநாடு
x

கலவையில் வைணவ சபை மாநாடு நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஸ்ரீ கரி வரதராஜ வைணவ சபை இரண்டாம் ஆண்டு மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வைணவ சபை மாநாடு, பிரபந்த சேவாகாலம் மற்றும் பஜனைகள், திருவீதி உலா மற்றும் கருடக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி மற்றும் சோளிங்கர் ஆசார்யன் சாமி ஆ௳ியோர் தலைமை தாங்கினார்கள். வந்தவாசி சீனிவாச ராமானுஜர்தாசர் முன்னிலை வகித்தார். தேசூர் லட்சுமி நாராயணா ராமானுஜர்தாசர் அருளிச்செயலால் மகாபாரதம் என்ற தலைப்பிலும், பென்னகர் வெற்றிச்செல்வி, ஆழ்வார் அவர்களின் அரங்கன் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள். சபை நிர்வாகிகள் அல்லாளச்சேரி கிருஷ்ணமூர்த்தி ராமானுஜர்தாசர், டி.புதூர் பார்த்தசாரதி ராமானுஜ தாசர் பிண்டி தாங்கல் கோடீஸ்வரன் என்ற வரதராஜ் மற்றும் குமார் என்ற ரங்கநாதர் ராமானுஜ தாசர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். முடிவில் வந்தவாசி சீனிவாச ராமானுஜர் நன்றி கூறினார்.


Next Story