வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம்


வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம்
x

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அன்புச்செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

முத்துக்குமார்:-எனது பகுதிக்குட்பட்ட நெய்க்குப்பை என்ற இடத்தில் புதிதாக குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

ராஜகார்த்திக்:- பேரூராட்சி பகுதியில் கால்நடைகளை அடைக்கும் பட்டி உள்ளது. அந்த பட்டி பராமரிக்கப்படாததால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கென்னடி:- எனது பகுதியில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

சாந்தி சியாமளா:- குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

வித்யாதேவி :-மருவத்தூர் பகுதியில் கூடுதலாக குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.

ஆனந்தன் :-எனது வார்டு பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

கவிதா:- விழக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்கும் வகையில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

மீனா:- இந்திரா நகர் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

செயல் அலுவலர்:-வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ.9,334 மானியம் வழங்க உள்ளது. இதுகுறித்து உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அறிவுசார் நூலகம்

தலைவர்:-உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அறிவுசார் நூலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

மேலும், பேரூராட்சிக்குட்பட்ட நான்கு இடங்களில் வடிகால் வசதியும், 2 இடங்களில் புதிய குடிநீர் தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது. 2.0 திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.



Next Story