வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்சி


வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்சி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்சி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய, நகர பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 99-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலர்சிவமுருகன் ஆதித்தன் பங்கேற்று வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story