வாஜ்பாய் பிறந்த நாள் விழா


வாஜ்பாய் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

கடையத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

கடையம்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கடையம் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஐந்தாம் கட்டளையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் அருள் செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய தலைவர் பி.ரத்தினகுமார், கடையம் கிழக்கு ஒன்றியம் முருகேசன், ஒன்றிய பொது செயலாளர் துரை, ஒன்றிய பொருளாளர் கொடியரசன், ஆழ்வார்குறிச்சி நகர தலைவர் முத்தையா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சங்கரன்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியில் பா.ஜனதா வர்த்தக பிரிவு சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி, சுப்பிரமணியன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் செந்தில் குமார், நிர்வாகிகள் ரேவா ராம், ராமர், சண்முகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story