பாறையில் வழுக்கி விழுந்து வாலிபர் சாவு


பாறையில் வழுக்கி விழுந்து வாலிபர் சாவு
x

அமிர்தியில் பாறையில் வழுக்கி விழுந்து வாலிபர் சாவு

வேலூர்

அடுக்கம்பாறை

வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கனிபாஷா என்பவரின் மகன் முக்தியர் (வயது 18).

இவர் தனது நண்பர்களான விருதம்பட்டை சேர்ந்த கிஷோர் (18), வசந்தபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), ஆதீஸ் (18) மற்றும் விருபாட்சிபுரத்தை சேர்ந்த சூரியா (18) ஆகியோருடன், நேற்று மாலை அமிர்தி பூங்காவுக்கு சுற்றி பார்க்க சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஜமுனாமுத்தூர் செல்லும் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சி ஓடைகளில் நண்பர்கள் அனைவரும் சுற்றி பார்த்ததுடன், நீர்வீழ்ச்சி ஓடைகளில் வரும் தண்ணீரில், நண்பர்களுடன் முக்தியரும் குளித்தார்.

மேலும் அங்குள்ள பாறைகளில் நண்பர்களுடன் சறுக்கு விளையாட்டு விளையாடி கொண்டிருந்த முக்தியர் பாசி வழுக்கியதில் நிலை தடுமாறி பாறையில் மோதி ஓடை நீரில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அமிர்தி கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story