மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
x

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு தெற்கு சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் நெப்போலியன் (வயது29). கட்டிடத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வேட்டைக்காரனிருப்பு புதுக்கடைத்தெருவில் சென்ற போது எதிரே வந்த மினிவேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியதாஸ் நெப்போலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோக்கிய தாஸ் நெப்போலியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜன் என்பவரை கைது செய்தனர்.


Next Story