வல்லா குளத்துப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா


வல்லா குளத்துப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா
x

வல்லா குளத்துப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே வல்லா குளத்துப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி சிறப்பு அபிேஷகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் தினந்தோறும் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த 23-ந்தேதி திரளான பக்தர்கள் நொய்யல் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு வந்தனர். அன்று இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகுகுத்தி வந்தும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story