இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா
x

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் அமைந்துள்ள திருஅருட்பா பீடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வள்ளலாரின் முப்பெரும் விழா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சேகரன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, துணை ஆணையர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழா ஒருங்கிணைப்பாளர் மாதவசின்ராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு வள்ளலாரின் பேரன் கே.உமாபதி, வேட்டவலம் ஜமீன் குடும்பத்தினர் உள்ளிட்ட சன்மார்க்க நெறியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.

மேலும் வள்ளலார் குறித்து நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு ஏற்றுதல், சன்மார்க்க கொடி ஏற்றுதல், பேரணி, ஆன்மிக சொற்பொழிவு, கருத்தரங்கம் போன்றவை நடைபெற்றது.

முடிவில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம் நன்றி கூறினார்.


Next Story