வள்ளிமுத்து பள்ளி ஆண்டு விழா
கோவில்பட்டியில் வள்ளிமுத்து பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஈ.வே.அ. வள்ளிமுத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் 66-ஆவது ஆண்டு விழா நடந்தது விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஆர். வி. எஸ். வேல் முருகேசன் தலைமை தாங்கினார். தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் டி.கே.டி. திலகரத்தினம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வினோத் கண்ணன் வரவேற்று பேசினார்.தலைமை ஆசிரியர்கள் மூ. துரை, ஜோ. தங்கதாய் நேன்சி ஆகியோர் ஆண்டு அறிக்கை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஆதீஸ், மாணவிகள் ஷேஅல்அதிபா, கனகலட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story