வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.54 லட்சம்
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.54 லட்சம் கிடைத்துள்ளது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மேக்ரோ கல்லூரி நிறுவன தலைவர் பொன்தங்கதுரை தலைமையில் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் ராதா, உதவி ஆணையர் கவிதா, ஆய்வாளர் கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பக்தர்கள், மாணவர்கள் காணிக்கைகளை எண்ணினர். இதில் மொத்தம் ரூ.3.54 லட்சமும், 14 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
Related Tags :
Next Story