வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது


வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Sept 2023 2:00 AM IST (Updated: 4 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கருமலை வேளாங்கண்ணி ஆலயம்

வால்பாறை கருமலையில் வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு ஆலய பங்கு குரு ஜெகன்ஆண்டனி தலைமையிலும், முடீஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி, அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு, இத்தாலி நாட்டு பங்கு குரு ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

திருப்பலிக்குப் பின் திருவிழா கொடியானது ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு வேளாங்கண்ணி மாதா ஜெபமாலை பாடல் பாடப்பட்டது. பின்னர் ஆலய பங்கு குரு ஜெகன்ஆண்டனி கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார்.

தேர் பவனி

கருமலை வேளாங்கண்ணி மாதா பக்தர்கள் மரியே வாழ்க மரியே வாழ்க என்று புகழ் பாடல் பாடினார்கள். விழாவை முன்னிட்டு வருகிற 7-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் மாலை 5.30 மணிக்கு ஜெப வழிபாடு, திவ்ய நற்கருணை ஆராதனை, திருப்பலி மற்றும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல், தேர் பவனி நடைபெறுகிறது.8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையில் கூட்டுப்பாடல், திருப்பலி தொடர்ந்து வேண்டுதல் தேர் எடுத்தல் மற்றும் சிறப்பு நவநாள் ஜெப வழிபாடு நடைபெறுகிறது.

கூட்டுப்பாடல்

9-ந் தேதி மாலை 6 மணிக்கு தேர்திருவிழா, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆராதனையும் அதனை தொடர்ந்து வெள்ளமலை எஸ்டேட் மற்றும் கருமலை எஸ்டேட் பகுதி மக்களின் சார்பில் தேர்பவனி நடைபெறுகிறது.10-ந் தேதி திருவிழா சிறப்பு கூட்டு பாடல், திருப்பலி பங்கு குருக்கள் ஜெகன்ஆண்டனி, விசுவாசம் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.


Next Story