மதிப்பெண்களை விட வாழ்வின் மதிப்பீடுகளே முக்கியம்


மதிப்பெண்களை விட வாழ்வின் மதிப்பீடுகளே முக்கியம்
x

மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்களை விட வாழ்வின் மதிப்பீடுகளே முக்கியம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சார்பு நீதிபதி இருதயராணி கூறினார்.

விருதுநகர்

மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்களை விட வாழ்வின் மதிப்பீடுகளே முக்கியம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சார்பு நீதிபதி இருதயராணி கூறினார்.

உலக நீதி நாள்

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய உலக நீதிநாள் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இருதய ராணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் எந்த சூழ்நிலையையும், சவால்களையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை பெற வேண்டும். ஆசிரியர்கள் நம்மை உருவாக்கும் சிற்பிகள் ஆவர். வாழ்க்கையில் முன்னேற மதிப்பெண்களை விட வாழ்வின் மதிப்பீடுகள் மிக முக்கியமாகும். நான் பள்ளி பருவத்தில் வெளியே செல்லும் பொழுது நீதிமன்றங்களில் நீதிபதிகள் நடந்து செல்வதை பார்த்து நாமும் அது போன்ற ஆக வேண்டும் என்று நினைத்து கொள்வேன்.

எதிர்கால இந்தியா

அதனால்தான் இன்று என்னால் இந்த நிலையை அடைய முடிந்துள்ளது. மாணவ-மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் மன தைரியத்துடன் சூழ்நிலை எதிர்கொள்ளும் மனதிடத்தை பெற வேண்டும். உங்களின் மனதில் விதைக்கும் நல்ல விஷயங்கள் தான் நாளை எதிர்கால இந்தியாவை வழி நடத்தும் சிற்பிகளாக உங்களை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி வரவேற்றார். முடிவில் குழந்தைகள் பாதுகாப்பக சமூக பணியாளர் கார்த்திகை ராஜன் நன்றி கூறினார். பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.



Next Story