வேன்-கார் மோதல்; ஒருவர் பலி


வேன்-கார் மோதல்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே வேன்-கார் மோதலில் ஒருவர் இறந்தார். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி குடும்பத்தினர் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேனில் ராமேசுவரம் வந்தனர். அப்போது பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் வந்த போது ராமேசுவரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்துக்குள்ளான 2 வாகனங்களில் வந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story