கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்-டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்-டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்-டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் சின்ன குன்னூரைச் சேர்ந்த ஹால்துரை (வயது 62) என்பவர் நேற்று முன் தினம் இரவு திருப்பூரில் இருந்து ஏற்கனவே பயன்படுத்திய ஆம்னி வேன் ஒன்றை விலைக்கு வாங்கி, சின்ன குன்னூருக்கு வருவதற்காக கோத்தகிரி வழியாக சென்றுள்ளார். வேனை அவரே ஓட்டிச் சென்றுள்ளார். இரவு சுமார் 10 மணியளவில் வேன் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது வேனுக்குள் திடீரென தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வேனை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால் தீயை அணைக்க முடியாததால் கோத்தகிரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story