வேன் மோதி, ஏட்டு மனைவி பலி
வேன் மோதி, ஏட்டு மனைவி பலி
ராமநாதபரம்
ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சிறுபோது கோழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தலைமை ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ஜெயலட்சுமி(37) மற்றும் மகன் அபிஷேக்(14) ஆகியோருடன் ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமியின் மனைவி ஜெயலட்சுமி பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து ஜெயலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை காவலர் கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் மொங்கான்வலசையை சேர்ந்த பால்சாமி (45) என்பவரை கைது செய்தார்.