லாரி மீது வேன் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் பலி
லாரி மீது வேன் மோதியதில், மதுரை மாநாட்டுக்கு சென்ற அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
லாரி-வேன் மோதல்
மதுரையில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, கோவையில் இருந்து அ.தி. மு.க.வை சேர்ந்த 17 பேர் ஒரு வேனில் புறப்பட்டனர். சிவகங்கையை சேர்ந்த அக்கீம் (வயது 35) என்பவர் வேனை ஓட்டினார்.
பழனி-திண்டுக்கல் சாலையில், ரெட்டியார்சத்திரம் அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனுக்கு முன்னால் லாரி ஒன்று சென்றது. ரெட்டியார்சத்திரம் பஸ்நிறுத்தத்தில் வந்தபோது லாரியும், அ.தி.மு.க.வினர் சென்ற வேனும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
அ.தி.மு.க. பிரமுகர் பலி
இந்த விபத்தில் வேனில் பயணம் லாரி மீது வேன் மோதியதில், மதுரை மாநாட்டுக்கு சென்ற அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.செய்த கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கதிரேசன் (41) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார்.
மேலும் கோவையை சேர்ந்த யாகப்பன் (72), அறிவழகன் (47), வேன் டிரைவர் அக்கீம் (35) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னா் கதிரேசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.