வேன் டிரைவர் கைது


வேன் டிரைவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே ஆணைக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், ஜல்லிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது குஜிலியம்பாறை அருகே தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் குஜிலியம்பாறை அருகே வெள்ளப்பாறையில் போலீசார் ரோந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். விசாரணையில், பிடிபட்ட நபர் குஜிலியம்பாறை அருகே கருங்கல்லை சேர்ந்த ஆம்னி வேன் டிரைவர் சதீஷ் (31) என்பதும், முருகேசனின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சத்யராஜை (25) போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story