வேன் டிரைவர் தற்கொலை
வடமதுரை அருகே விஷம் குடித்து வேன் டிரைவர் தற்கொலை செய்தார்.
வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜா என்ற லட்சுமணநரசிங்க பெருமாள் (வயது 52). மினி வேன் டிரைவர். கடந்த சில ஆண்டுகளாக இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதற்காக அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ராஜா, கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர், ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட ராஜாவுக்கு சாவித்திரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.