வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; தம்பதி பலி


வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; தம்பதி பலி
x

தொண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவிலுக்கு வந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 50). இவருடைய மனைவி ராணி(40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்ட தானம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கவ்வா ஊருணி அருகே சென்றபோது, அந்த வழியாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா வேன் வந்தது. அந்த வேனும், ேமாட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அசோகன், ராணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அசோகன், ராணி ஆகியோரின் உடல்களை பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story