டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து; 16 பேர் காயம்


டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து; 16 பேர் காயம்
x

டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வேனில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வேனை உரிமையாளர் செந்தில்குமார் ஓட்டினார்.

எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே திடீரென வேனின் டயர் வெடித்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த அறிவழகன் (வயது 43), சஞ்சய் (33) வாரி (18) உள்பட 16 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story