வாணப்பட்டரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்


வாணப்பட்டரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

வாணப்பட்டரை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 16-ந் தேதி முதல் அம்மன் பச்சை பட்டினி நோன்பு தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டாள் தெரு, கீழ ஆண்டாள் தெரு, சின்ன கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் தேர் கோவில் வந்தடைந்தது. பின்னர் அம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 30-ந் தேதி குட்டிக்குடித்தல் நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி பெரிய பூஜை மற்றும் அன்னதானமும் நடக்கிறது.


Next Story