பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரெயில் - உற்சாக வரவேற்பு


பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரெயில் - உற்சாக வரவேற்பு
x

பெங்களூரூவில் இருந்து வந்தே பாரத் ரெயில் சென்னை வந்தடைந்தது.

சென்னை,

இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரெயிலை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரெயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரெயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை வந்தடைந்தது. பெங்களூரூவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது வந்தே பாரத் ரெயில். சென்னை வந்த வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வந்தே பாரத் ரயிலை வரவேற்றார்.

மேலும் வந்தே பாரத் ரெயிலுக்கு மேளம் தாளம் இசைத்து மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story