வண்டிமலையச்சி அம்மன் கோவில் கொடைவிழா:பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்


வண்டிமலையச்சி அம்மன் கோவில் கொடைவிழா:பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வண்டிமலையச்சி அம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் நடுவிற்பட்டி சிவகளை செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி ஸ்ரீவண்டி மலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 1-ந்தேதி முதல் இரவு கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் வண்டி மலைச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி, கும்ப அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை 5.30 மணி அளவில் முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நடுவிற்பட்டி மெயின் பஜார், பட்டத்து விநாயகர் கோவில் வழியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று நடுவிற்பட்டி தெப்பத்தில் காட்சி அளிக்கப்பட்டது.


Next Story