வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிப்பு
ஓட்டப்பிடாரம் அருகே வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
ஒட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு சார்பில் மரியாதை
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் அரசு சார்பில் வாஞ்சிநாதன் 111-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வி நாராயண பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தி.மு.க
வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தி.மு.க சார்பில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் வாஞ்சிநாதன் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ்
வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தாளமுத்துநகர் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அந்தோணி மிக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அந்தணர் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜெயபிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையிலிருந்து தேசிய சிந்தனை பேரவை சார்பில் தலைவர் வெங்கடாசலபதி, செயலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட வாஞ்சிநாதன் நினைவு ஜோதியை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் யூனியன் தலைவர் ரமேஷ் பெற்றுக்கொண்டார்.