வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிப்பு


வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிப்பு
x

கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் இந்திய கலாசார நட்புறவு கழகம் சார்பில் வாஞ்சிநாதன் நினைவு தினம் மாநிலச் செயலாளர் தமிழரசன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. வாஞ்சிநாதன் உருவப்படத்திற்கு நகரச் செயலாளர் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், ஜெய் கணேசன், சங்கர்ராம், வக்கீல் ஜெயஸ்ரீ, திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், உரத்த சிந்தனை சிவானந்தம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரி சீலா, தாவீது ராஜா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கூட்டத்தில் வாஞ்சி மணியாச்சியில் வாஞ்சிநாதன் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். அவர் வரலாற்று புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story