இசைக்கு ஏற்ப நடனம் ஆடி வரவேற்ற வாணியம்பாடி தாசில்தார்
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை இசைக்கு ஏற்ப நடனம் ஆடி வரவேற்ற வாணியம்பாடி தாசில்தார்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஒலிம்பியாட் ஜோதி திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக சென்னை நோக்கி செல்ல வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த ஜோதியை, வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாடல் மற்றும் இசைக்கு ஏற்ப வாணியம்பாடி தாசில்தார் சம்பத் நடனம் ஆடியும், குத்தாட்டம் போட்டும் வரவேற்றார்.
இது அங்கு வந்த பார்வையாளர்களிடமும் பொதுமக்களிடமும் பெருத்த வரவேற்பை உண்டாக்கியது.
வரவேற்பு நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர் பிரேமலதா மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.