வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
மொரப்பூர்:-
தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் கடத்தூரில் நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வேலு தலைமை தாங்கினார். பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கனல் ராமலிங்கம், மாநில வன்னியர் சங்க செயலாளர் ஆர்.அரசாங்கம், தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.வி.செந்தில், மாவட்டத் தலைவர் அல்லி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி கலந்து கொண்டு பேசுகையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு விருப்பம் மனுக்கள் தரப்படுகிறது. நிர்வாகிகளாக வர விரும்பும் நபர்கள், வன்னியர் சங்கத்தை பலப்படுத்த அயராது பாடுபடுபவர்களாகவும், சுறுசுறுப்பாக பணியாற்ற கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்- அமைச்சராக வர வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.இமயவர்மன், திருவேங்கடம், மைக்கண்ணன், சிவக்குமார், பசுமை தாயக மாவட்ட தலைவர் மாது, பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி ராம சுந்தரம், தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. பொருளாளர் நாகேஸ்வரி, மாவட்ட உழவர் பேரிக்க நிர்வாகிகள் முத்துசாமி, சின்னசாமி, மாவட்ட மகளிரணி நிர்வாகி கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கடத்தூர் நகர தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.