கிராம உதவியாளர் பணிக்கு நேர்காணல்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பணிக்கு மொத்தம் 4 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 596 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். இதைத்தொடர்ந்து நேர்காணல் நேற்று முன்தினம் முதல் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேற்று 2-வது நாளாக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் நேர்காணல் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பு, வாகனம் ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி வரை நேர்காணல் தொடர்ந்து நடக்கிறது. அதன்பிறகு கலெக்டரின் ஒப்புதல் பெற்று கிராம உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
Next Story