கிராம நிர்வாக அலுவலகம் அருகில் போதை ஆசாமிகள் அட்டகாசம்
உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் போதை ஆசாமிகள் தினசரி ரகளையில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள்
இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதையின் பிடியில் சிக்கி மீண்டு வர முடியாத நிலை உள்ளது. ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் போதையில் அட்டகாசம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பல குற்ற சம்பவங்களுக்கு அடிப்படையாக போதை உள்ளது நிரூபணமாகியுள்ளது.உடுமலை-தளி சாலையில் உள்ள மேம்பாலத்துக்கு கீழ், காந்திசவுக் பகுதியில் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்துக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதற்கு எதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்களும் இந்த பகுதிக்கு அருகில் உள்ளது. இந்தநிலையில் சமீப காலங்களாக இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குப் பின்னால் காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டமாக ஒன்றுகூடும் போதை ஆசாமிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
போதைப்பொருட்கிராம நிர்வாக அலுவலகம் அருகில் போதை ஆசாமிகள் அட்டகாசம்கிராம நிர்வாக அலுவலகம் அருகில் போதை ஆசாமிகள் அட்டகாசம்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கும்பலாக கூடும் இளைஞர்கள் சிலர் இங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள் என பலவிதமான போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.அதனை தட்டிக் கேட்பவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். மேலும் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, காது கூசுமளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் மோதிக் கொள்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போதை ஆசாமிகளுக்கு பல குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கும் என்ற அச்சம் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.மதுவை வெறுத்த மகானின் பெயர் தாங்கிய காந்திசவுக் பகுதியில், அதிகாரம் படைத்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு அருகில் நடைபெறும் இந்த அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைப்பது எப்படி? இவர்கள் மூலம் போதைப் பொருட்கள் புழக்கத்தில் விடப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.