கோவில்பாப்பாகுடி அருகே சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகம்
மதுரை கோவில்பாப்பாகுடி அருகே பரவை ரோட்டில் உள்ள சீரடி சாய்பாபா தியான பீடம் கோவிலில் 3-ம் ஆண்டு வருடாபிஷேகம், உலக நன்மைக்காக 108 சங்க அபிஷேகம் நடந்தது.
புதூர்,
மதுரை கோவில்பாப்பாகுடி அருகே பரவை ரோட்டில் உள்ள சீரடி சாய்பாபா தியான பீடம் கோவிலில் 3-ம் ஆண்டு வருடாபிஷேகம், உலக நன்மைக்காக 108 சங்க அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் மகா கணபதி பிரார்த்தனை, லட்சுமி ஹோமம், கோ பூஜை, மகா பூர்ணகுதி, கோமாதா பூஜை உள்பட 21 அபிஷேகம் நடந்தது. ஸ்ரீசீரடி அர்ச்சனாந்தா சுவாமி, காசி ஆனந்தா சிவாச்சாரியார் தலைமையில் ஆரப்பாளையம் திருவாப்புடையார் கோவில் சிவக்குமார் பட்டர் யாக பூஜை நடத்தினர் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு சமயநல்லூர், பரவை, சாந்தி நகர், கூடல்நகர் பொதும்பு, கோவில்பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரேமாசாய் குப்புசாமி, செல்வி, மோகேஷ், மாரிச்சாமி, சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.