வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி


வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி
x

பட்டிவீரன்பட்டி அருகே வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மூலவர் சிலை சேதமடைந்துள்ளது. இதனால் உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளும், கோவில் சுவர்களில் பழங்கால கல்வெட்டுகளும் உள்ளன.

பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவிலை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக ஆயத்த பணிகளை கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை உதவிபொறியாளர் சந்தானமாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.


Next Story