வரகுண பாண்டீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


வரகுண பாண்டீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x

ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் எழுந்தருளினர்.

சபாநாயகர் தொடங்கி வைத்தார்

சபாநாயகர் அப்பாவு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுத்துச் சென்றனர். தேர் 4 ரதவீதிகள் வழியாக சென்று மாலை 3 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி ரதவீதிகளில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தில் தாசில்தார் வள்ளிநாயகம், கோவில் செயல் அலுவலர், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி, ராதாபுரம் அரவிந்தன், கோவிந்தன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story