பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும்


பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  அலுவலர்கள் எடுக்க வேண்டும்
x

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்,

இயற்கை இடர்பாடுகளை மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் ெதரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

நாகை மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை, போலீஸ்துறை சார்பில் நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரப்பர் படகு, மரம் வெட்டும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கண்காணிக்க உத்தரவு

மேட்டூர் மற்றும் கல்லணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் இரவு நேரங்களில் உபரிநீரை வெளியேற்றக்கூடாது. பகல் நேரங்களில் உபரிநீரை வெளியேற்றி அவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதன் அடிப்படையில் நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குனர் பெரியசாமி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story