வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x

கொடியாலத்தூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி அய்யப்பன் தலைமை தாங்கினார். முகாமில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீன சிகிச்சை முறைகளுடன் கூடிய எக்ஸ்ரே, ஈசிஜி, ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, சித்த மருத்துவம், கண் மருத்துவம், கா்பிணி பெண்களுக்கான ஸ்கேனிங் பரிசோதனை, பல் மருத்துவம், அனைத்து ஆய்வக பரிசோதனை, மனநல மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் தொடர்பான ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.‌ இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் மாவட்ட நல கல்வியாளர் மனவாளன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் திருமுருகன், ‌வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ்குமரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோகுலநாதன், ‌‌ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், உறுப்பினர் பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் செல்விவீரமணி, ‌கிராம சுகாதார செவிலியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சி செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story