வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வேடநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
வேடநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மா.குப்புசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கியும், தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், மருத்துவத் துறையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவது குறித்தும் பேசினார்.
முகாமில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த சிறப்பு மருத்துவ குழுவினரால் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.