எரிபொருள் மீதான வாட் வரி.. 29சதவீதத்தை, 1சதவீதமாக குறைத்தால் -தமிழக அரசுக்கு மத்திய மந்திரி அறிவுரை
சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை, மத்திய விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை, மத்திய விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் முதல் கட்ட பணி இந்த ஆண்டும், 2ம் கட்ட பணி அடுத்த ஆண்டு இறுதியில் முடியும் என்றார்.
அதே நேரத்தில், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய தேவையான நிலங்களை கையகப்படுத்தி தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். விமான எரிபொருள் மீதான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக தமிழக அரசு குறைத்தால் விமான கட்டணம் தாமாக குறையும் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
Related Tags :
Next Story