வி சி க கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் வி சி க கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, சசிகுமார், பழனி, வக்கீல் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாவு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரிஷிவந்தியம் தொகுதி செயலாளர் திராவிடச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தலித்சந்திரன், சிந்தனைவளவன், கண்ணன் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.