வீர நரசிம்மபெருமாள் கோவில் குடமுழுக்கு


வீர நரசிம்மபெருமாள் கோவில் குடமுழுக்கு
x

திருவெண்காடு மங்கைமடம் வீர நரசிம்மபெருமாள் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு மங்கைமடம் வீர நரசிம்மபெருமாள் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.

வீர நரசிம்மபெருமாள் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு பகுதியில் பஞ்ச (ஐந்து) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இதில் 2-வது கோவிலாக மங்கை மடம் வீர நரசிம்மபெருமாள் கோவில் விளங்குகிறது.முந்தைய காலத்தில் திருமங்கை ஆழ்வார், குமுதவல்லி நாச்சியாரை மணம் புரிய வேண்டி ஒரு வருட காலத்திற்கு 1008 வைஷ்ணவ அடியார்களுக்கு அன்னதானம் வழங்கியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. மேலும் இந்த நரசிம்மரை பற்றி திருமங்கையாழ்வார் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார். இந்த கோவிலில் வழிபட்டு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள் விலகி, திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

திருப்பணி

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி நடந்து வந்தது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10-க்குள் நடக்கிறது.இதை முன்னிட்டு நேற்று காலை வாஸ்து சாந்தி, கிரகப்பிரதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், முதல் காலயாக பூஜை, தீபாராதனைகள் நடந்தது. மாலை 2-வது கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாரானை ஆகியவை நடந்தது.

நாளை குடமுழுக்கு

இதை ெதாடர்ந்து இன்று(சனிக்கிழமை)காலை 3-ம் காலயாக பூஜையும், மாலை 4-ம் காலயாக பூஜையும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 5-ம் காலயாக பூஜையும் நடக்கிறது. இதையடுத்து கடங்கள் புறப்பாடாகி காலை 9 மணி முதல் 10-க்குள் கோவில் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

குடமுழுக்கு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாராயணன் அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story