மேலூர் அருகே வீரகாளி அம்மன் கோவில் திருவிழா - ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம்


மேலூர் அருகே வீரகாளி அம்மன் கோவில் திருவிழா - ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம்
x

வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

மதுரை

மேலூர்,

வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

பூத்தட்டு திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தில் வீரகாளி அம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று பூத்தட்டு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு கிராம மக்கள் காப்புகட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். பின்னர் பூத்தட்டு ஊர்வலம், வீரகாளி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து, கீழவளவு பெரியமந்தையில் வைக்கப்பட்டது. அங்கு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி புறப்பட்டு ஊர்வலமாக வீரகாளியம்மன் கோவிலுக்கு வந்தது.

ஆயிரக்கணக்கான பெண்கள்

கீழவளவு, வாச்சம்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வடக்குவளைபட்டி, குழிசேவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பூக்களை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story