தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர் பெரியார்- கி.வீரமணி


தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர் பெரியார்- கி.வீரமணி
x

தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர் பெரியார் என தமிழ் இணைய மாநாட்டில் கி.வீரமணி கூறினார்.

தஞ்சாவூர்

தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர் பெரியார் என தமிழ் இணைய மாநாட்டில் கி.வீரமணி கூறினார்.

இணைய மாநாடு

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் இந்திய மொழிகள் நிறுவனம்(மைசூர்) சார்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நடந்தது.

இதில் பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி, 'பெரியாரும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்' என்ற தலைப்பில் காணொலிக்காட்சி மூலமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள்

பெரியார் தமிழ் மொழிக்கு எண்ணற்ற தொண்டுகள் செய்தவர். ஒரு பூரண பகுத்தறிவுவாதியாக இருந்து கொண்டு சமூக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்தவர். மொழி பண்பாட்டு கருத்துக்களால் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தார்.

மனிதனுக்கு 3 பற்றுகள் உண்டு. அதாவது அறிவுப்பற்று, மனிதப்பற்று, வளர்ச்சிப்பற்று தேவை என்று பெரியார் கூறினார். தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை செய்தார்.

மொழி என்பது கருவி

பழமையான கருத்துக்களை புறந்தள்ளி புதுமையான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மொழி சிந்தனையை வளர்க்க வேண்டும். மொழி என்பது ஒரு கருவி என்று பெரியார் குறிப்பிட்டார். அது ஒரு போர் கருவியாக விளங்க வேண்டும் என்றும் கூறினார். காலத்துக்கேற்ப வேகப்படுத்த வேண்டும். 1938-லேயே தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்று முழக்கமிட்டவர் பெரியார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story