வீரன் சுந்தரலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பு
பாளையங்கோட்டையில் வீரன் சுந்தரலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி
சுதந்திர போராட்ட வீரரான வீரன் சுந்தரலிங்கத்தின் 223-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, பாளையங்கோட்டை மகாராஜாநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கி, அலங்கரிக்கப்பட்ட வீரன்சுந்தரலிங்கம், வீரமள்ளத்தி வடிவு ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன்சோழன், மாநகர பொருளாளர் மணிமாறன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் பரமசிவபாண்டியன், நகர செயலாளர் மோகன்மள்ளர், இளைஞரணி செயலாளர் சுரேஷ் பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென் மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story