வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா
கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் 253-வது பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை சாமிராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பீட்டர், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் அமலி பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க.
பா.ஜ.க.வினர் மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமையில், நகரத் தலைவர் சீனிவாசன் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, நகர் சபை கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
த.மா.கா.வினர் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கனி, வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, நகர துணை செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாம் தமிழர் கட்சியினர் தொகுதி செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் அன்புராஜ் ஏற்பாட்டில் லாயல் மில் காலனியிலிருந்து 253 பெண்கள் பால்குடம் எடுத்து மேள தாளம்,
கரகாட்டத் துடன் ஊர்வலமாக புறப்பட்டார்கள். ஊர்வலத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து வீரன் சுந்தரலிங்கனார் சிலை முன்பு வந்தது. பின்னர் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு வெங்கடேஷ் செய்திருந்தார்.