ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பூர் மாநகரில் சுமார் பல லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தொழில் வளர்ச்சி காரணமாக மக்களின் வருகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு என்பது தொடர்ந்து பல வருடங்களாக இருந்து வருகிறது. போலீசார் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் எடுத்து வந்தாலும், நிரந்தர தீர்வு என்பதும் தற்போது வரை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லுபவர்கள், ஒரே நேரத்தில் சாலையில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் சாலை அருள்புறம் வரை சாலையோரம் ஆக்கிரப்பு செய்திருந்த கடைக்காரர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைவரும் ஆக்கிரமிப்பு சேர்ந்த கடைகள் விரைவாக அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று பல்லடம் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். மேலும் பல்லடம் சாலை இருபுறமும் சாலை விரிவாக்க பணியும் நடைபெற்று வருவதால், விரைவாக போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.