வீரபாண்டி அரசு கல்லூரியில்அடுத்த தலைமுறை கல்லூரி நூலக திட்டம் தொடக்கம்
தேனி அருகே வீரபாண்டி அரசு கல்லூரியில் அடுத்த தலைமுறை கல்லூரி நூலக திட்டம் தொடங்கப்பட்டது.
தேனி
தேனி அருகே வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அடுத்த தலைமுறை கல்லூரி நூலகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தலைமை தாங்கி பேசினார். நூலகத்தின் பயன்கள், நூலகத்தை பயன்படுத்தும் விதம், வாசிப்பு பழக்கத்தின் நோக்கம், வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கணினி அறிவியல் துறை தலைவர் சுல்தான் இப்ராகிம் வரவேற்றார். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி நூலகர் (பொறுப்பு) ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story