வீரபாண்டி அரசு பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை


வீரபாண்டி அரசு பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
x
திருப்பூர்


2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படிக்கும் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறை வசதி கோரி அனைத்துக்கட்சியினர் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

கூடுதல் வகுப்பறை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி54-வது வார்டு கவுன்சிலர் அருணாசலம் தலைமையில் வீரபாண்டி பகுதியை சேர்ந்த அனைத்துக்கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,932 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் 20 வகுப்பறைகள் உள்ளன. ஆனால் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு 40 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் தேவை உள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிக்கு 22 வகுப்பறைகள் கூடுதலாக தேவைப்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துடன் பள்ளி வகுப்பறையின் வராண்டாவில் அமர்ந்து படிக்கிறார்கள்.

பல்லடம் அல்லாலபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம், பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

வீரபாண்டி அரசு பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை

அந்த இடம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் அருகில் காளிகுமாரசாமி திருக்கோவில் அறக்கட்டளை கட்டுப்பாட்டில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே இந்த இடங்களில் ஏதாவத ஒரு இடத்தை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story