வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
இந்து புரட்சி முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வழுவூர் ஜோதி.குமரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் புகழ்வாய்ந்த இளங்கிளை நாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு ஆன்மிக மெய்யன்பர்கள், அடியார் பெருமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வந்து தரிசித்து செல்கின்றனர்.தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து மேற்கூரைகளில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், திருப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ள இந்த கோவிலின் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.