சந்தையில் காய்கறி நிலவரம்
சந்தையில் காய்கறி நிலவரம்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ.40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ.40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.