உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் (டிசம்பர்)ரூ.1 கோடியே 90 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் (டிசம்பர்) ரூ.1 கோடியே 90 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் (டிசம்பர்)
ரூ.1 கோடியே 90 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை உழவர்சந்தை
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத்துறையின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் (டிசம்பர்) 2,215 விவசாயிகள் மொத்தம் 7 லட்சத்து 57 ஆயிரத்து 905கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரத்து 755-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 84 ஆயிரத்து 215 பேர் வாங்கி பயனடைந்தனர்.
காய்கறிகள்வரத்து குறைந்தது
கடந்த நவம்பர ்மாதத்தை விட, டிசம்பர் மாதம் காய்கறிகளை கொண்டு வந்திருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 106 பேர் அதிகரித்திருந்த நிலையிலும் காய்கறிகளின் வரத்து 26 ஆயிரத்து885 கிலோ குறைவாக இருந்தது. மொத்த விற்பனை தொகை ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 455 குறைவாக இருந்தது.
காய்கறிகளை வாங்குவதற்கு கடந்த நவம்பர் மாதத்தைவிட டிசம்பர் மாதம் பொதுமக்கள் 4 ஆயிரத்து 750 பேர் குறைவாக வந்திருந்தனர். கடும்பனி காரணமாக பொதுமக்கள் வருகை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காய்கறிகள் விலை
உடுமலை உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.25-க்கும்,வெண்டைக்காய் ரூ.30-க்கும், தக்காளி (நாட்டு ரகம்) ரூ.18-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும்,புடலங்காய் ரூ.25-க்கும், பீர்க்கங்காய் ரூ.45-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், கொத்தவரை ரூ.34-க்கும், பூசணிக்காய் ரூ.15-க்கும், அரசாணிக்காய் ரூ.12-க்கும், பச்சைமிளகாய் ரூ.55-க்கும், சின்னவெங்காயம ்ரூ.90-க்கும், பெரியவெங்காயம் ரூ.38-க்கும், பொறியல் தட்டை ரூ.30-க்கும், பச்சை மொச்சை ரூ.55-க்கும், சேனைக்கிழங்கு ரூ.35-க்கும், கருணைக்கிழங்கு ரூ.45-க்கும், உருளைக்கிழங்கு ரூ.45-க்கும், காரட் ரூ.45-க்கும், பீட்ரூட் ரூ.20-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும்,முள்ளங்கி ரூ.18-க்கும், பட்டாணி ரூ.80-க்கும், பூண்டு ரூ.160-க்கும், இஞ்சி ரூ.65-க்கும் விற்கப்பட்டது.
புஷ்பீன்ஸ் ரூ.50-க்கும், மேரக்காய் ரூ.28-க்கும், வாழைக்காய ரூ.40-க்கும், நெல்லிக்காய் ரூ.65-க்கும், கொய்யாப்பழம் ரூ.60-க்கும், எலுமிச்சம்பழம் பழம் ரூ.50-க்கும், பப்பாளி ரூ.24-க்கும், சப்போட்டா ரூ40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
----