உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x

உழவர் சந்தைகளில் ரூ.17¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறியை பல்வேறு பகுதிகளில் இருந்து உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளிசந்தைகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாகவும், தரமானதாகவும் கிடைப்பதால் பொதுமக்கள் இங்கு காய்கறியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் ஏராளமானோர் காய்கறியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் காய்கறி வாங்க அலைமோதியது. இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு 25 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 192-க்கு விற்பனையானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 60¾ டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 189-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story