ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை


ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை
x

நல்லம்பள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தில் இருந்து கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படையும் அமைத்துள்ளது.

இந்த தனிப்படையினர் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர். இதனிடையே வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரி வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாகன சோதனை

இதையடுத்து தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்- இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற லாரிகள், சரக்கு வேன்கள் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் டிரைவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் ரேஷன் அரிசி எதுவும் கிடைக்கவில்லை. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story